யாழ்ப்பாணத்தில் திடீரென வந்த புத்தர் - பின்னணியில் இராணுவத்தினர் (Video)
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இனங்காணப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த பகுதியில் நின்ற இராணுவத்தினரே அதனை அமைத்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையடுத்து சிலை இராணுவத்தினரால் எடுத்துச்செல்லப்பட்டது.
மேலதிக தகவல் - கஜிந்தன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் திடீரென முளைத்த புத்தரினால் அந்தப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரச மரத்துக்கு கீழே புத்தர் சிலை இனங் காணப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக இனந்தெரியாதவர்களால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.
நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் குறித்த சிலை வைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை ஊர் மக்களால் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து குறித்த சிலை இராணுவத்தினரால் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
