நாட்டிலுள்ள 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி: விவசாய அமைச்சர் தகவல்
நாட்டிலுள்ள சுமார் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் நாளைய தினம் (27.03.2023) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்லை அரிசியாக மாற்றி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசு வழங்கப்படவுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வீதம் இரண்டு மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த அரிசியைக் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 20 மணி நேரம் முன்
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri