தேசிய வெசாக் விழா தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
இந்த ஆண்டிற்கான தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மே 10 முதல் 16 வரை தேசிய வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் இன்று கருத்து தெரிவிக்கையில், தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் உள்ள சர்வதேச பௌத்த நிலையத்தை மையமாக வைத்து நடத்தப்படும்.
இக்காலப்பகுதியில் பல்வேறு பௌத்த மத நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
