அநுரவின் கைகளுக்கு கிடைத்த ரணிலின் முக்கிய ஆவணம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகியிருந்தார்.
முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
விக்ரமசிங்கவுக்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், புத்தாண்டு விடுமுறை மற்றும் வெளிநாட்டில் இருந்த தனது வழக்கறிஞர் இல்லாதது ஆகியவை அவர் முன்னிலையாகாமைக்கான காரணங்களாக குறிப்பிட்டார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
இந்நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் சில சர்ச்சைகள் தற்போது கிளம்பியுள்ளன.
அதில் சில ஆவணங்கள் அநுரகுமார திசாநாயக்கவின் கைகளுக்கும் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த ஆவண கோவை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது கீளுள்ள காணொளி...
