சீன வெடியை கடித்து பார்த்த பல் வைத்தியர்
மகன் வாங்கி வைத்திருந்த சீன வெடியை வாயால் கடித்த அவரது தாயான பல் மருத்துவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் நடந்துள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பல் வைத்தியரின் மகன் சீன வெடியை வாங்கி வீட்டிலுள்ள மேசையில் வைத்துள்ளார்.
மேலதிக விசாரணை
அதன் பின்னர், வீட்டிற்கு வந்த குறித்த பெண், மேசையில் இருந்த சீன வெடியை எடுத்து கடித்து பார்த்த போது அது திடீரென வெடித்துள்ளது.
இதனையடுத்து, படுகாயமடைந்த பெண், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வெடியை உணவுப்பொருள் என நினைத்து அவர் கடித்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
