யாழில் மின்னல் தாக்கத்தினால் பலர் பாதிப்பு!
யாழில் (Jaffna) ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும் பகுதியில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/208 கிராம சேவகர் பிரிவில் இரு குடும்பத்தை சேர்ந்த ஏழுபேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/279 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 5பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/301 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 3பேரும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/426 கிராம சேவகர் 1 குடும்பத்தை சேர்ந்த 4பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 1 மணி நேரம் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam