பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு: பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சேவைகள்
விசேட பொது போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (22.12.2023) முதல் குறித்த விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பும் பொதுமக்களுக்காக அனைத்து நீண்ட தூரப் பயணங்களுக்கும் கூடுதலாக 100 பேருந்துகள் இயக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறப்பு தொடருந்து சேவை
இதேவேளை, பண்டிகை கால சிறப்பு தொடருந்து சேவை நாளைய தினம் (23.12.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் பயணிக்கும் தொடருந்துகளுக்கான விசேட நேர அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 31ஆம் திகதி வரை நடையில் இருக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 22
கொழும்பு கோட்டை - பதுளை வரை - இரவு 7:30 மணிக்கு புறப்படும்.
பதுளை - கொழும்பு கோட்டை - மாலை 5:20 மணிக்கு புறப்படும்.
டிசம்பர் 23
கொழும்பு கோட்டை - பதுளை - காலை 7:30 மணிக்கு புறப்படும்.
கொழும்பு கோட்டை - பதுளை வரை - இரவு 7:30 மணிக்கு புறப்படும்.
கண்டி - பதுளை - இரவு 7:00 மணிக்கு புறப்படும்.
பதுளை - கொழும்பு கோட்டை - மாலை 5:20 மணிக்கு புறப்படும்.
டிசம்பர் 24
பதுளை - கொழும்பு கோட்டை - காலை 7:45 மணிக்கு புறப்படும்.
பதுளை - கண்டி - காலை 10:45 மணிக்கு புறப்படும்
டிசம்பர் 25
கொழும்பு கோட்டை பதுளை - காலை 7:30 மணிக்கு புறப்படும்.
கண்டி - பதுளை - காலை 7:00 மணிக்கு புறப்படும்.
கொழும்பு கோட்டை - பதுளை வரை - இரவு 7:30 மணிக்கு புறப்படும்.
பதுளை - கொழும்பு கோட்டை - மாலை 5:20 மணிக்கு புறப்படும்
டிசம்பர் 26
கொழும்பு கோட்டை - பதுளை - இரவு 7:30 மணிக்கு புறப்படும்.
பதுளை - கொழும்பு கோட்டை - காலை 7:45 மணிக்கு புறப்படும்.
பதுளை - கண்டி - காலை 10:45 மணிக்கு புறப்படும்.
பதுளை - கொழும்பு - மாலை 5:20 மணிக்கு புறப்படும்.
டிசம்பர் 27
கொழும்பு கோட்டை - பதுளை - காலை 7:30 மணிக்கு புறப்படும்.
டிசம்பர் 28
பதுளை - கொழும்பு கோட்டை - காலை 7:45 மணிக்கு புறப்படும்.
டிசம்பர் 29
கொழும்பு கோட்டை - பதுளை - காலை 7:30 மணிக்கு புறப்படும்.
டிசம்பர் 31
பதுளை - கொழும்பு கோட்டை - காலை 7:45 மணிக்கு புறப்படும்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 8 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan