மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள்!
போக்குவரத்துக் கட்டுப்பாட்டை பேணி, உயிர்களைப் பாதுகாக்கும் முகமாக வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை, அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் குறித்த நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பணிப்புரை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை
வீதிகளில் மேற்கொள்ளப்படும், இந்த முன்முயற்சியானது, புதிய அரசாங்கத்தின் கொள்கையான, ‘ஒரு செழிப்பான தேசம் - ஓர் அழகிய வாழ்க்கை’யின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும், ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாகனங்களில் பல்வேறு வர்ணங்களின் கூடுதலாக ஒளிரும் விளக்குகள், சட்டவிரோத மாற்றங்கள், உரத்த ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் மற்றும் விபத்துகளுக்கு பங்களிக்கக்கூடிய கூடுதல் பாகங்கள் என்பவை தொடர்பில்,கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த செயற்பாடுகளை, முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும், தினமும் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருமுறை இரண்டு போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri