தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!
2025 மார்ச் மாதத்தில் சிறப்பு தொடருந்து சேவை திட்டம் ஒன்றை தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை
பாடசாலை விடுமுறை மற்றும் ஸ்ரீபாத யாத்திரை பருவத்துடன் இணைந்ததாக இந்த சிறப்பு தொடருந்து சேவை திட்டம் திட்டமிட்டுள்ளது.
தொடருந்து பொது முகாமையாளர் ஜே.ஐ.டி. ஜெயசுந்தர அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கு சிறப்பு தொடருந்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு தொடருந்து சேவைகள்
இதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு சிறப்பு தொடருந்து சேவையொன்று திட்டமிடப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை நோக்கி காலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் தொடருந்து , 2025.03.13 முதல் 2025.03.31 தினசரி பயணிக்கும்.
காங்கேசன்துறை - கொழும்பு கோட்டை. காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 01.50 மணிக்கு புறப்படும் தொடருந்து , 2025.03.13 முதல் 2025.03.31 தினசரி பயணிக்கும்.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு சிறப்பு தொடருந்து சேவையொன்று திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 07.30 க்கு புறப்படும் தொடருந்து, 2025 மார்ச் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் பயணிக்கும்.
இதேவேளை பதுளையில் இருந்து மாலை 5.20 க்கு புறப்படும் தொடருந்து, 2025 மார்ச் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் பயணிக்கும்.

குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் Cineulagam

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri
