திருகோணமலையில் மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய குடும்பஸ்தர் கைது
திருகோணமலையில் (Trincomalee) மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கைானது நேற்று (9) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய தீர்த்தக்கரை சிலாவத்தையில் வசிக்கும் கடற்றொழில் சங்க தலைவராவார்.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் திருகோணமலையில் உள்ள மனைவியின் சித்தி வீட்டிற்கு போய்வருவது வழக்கமான நிலையில் சித்தியின் மகளான 15 வயதுடைய பாடசாலை மாணவியை அதிக நாட்களாக தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், மாணவிக்கு உடல் நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறித்த மாணவி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தபட்டபோது அவர் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
விளக்கமறியல்
இதனையடுத்து குறித்த மாணவியிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் நேற்றையதினம் (9) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணையின் பின்னர் இன்றையதினம் (10) முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த மாதம் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் Cineulagam

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri
