செவ்வந்தி தொடர்பில் பொய்யான தகவல் வழங்கியவருக்கு விளக்கமறியல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக பொலிஸாரை தவறாக வழிநடத்தியதாகவும், தவறான தகவல்களை வழங்கியதாகவும் கூறப்படும் சந்தேக நபரை, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல, மார்ச் 24 ஆம் திகதி வரை, குறித்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு, இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
பெலிதெனிய, திக்வெல்லவைச் சேர்ந்த சலஹிரு சம்பத் சமரந்த, என்பவரே, இந்த குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டார்.
தற்போது கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் இஷார செவ்வந்தி, திக்வெல்லவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் அளித்தமைக்காகவே, அவர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் Cineulagam

குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் Cineulagam
