மேல் மாகாண பாடசாலைகளில் விசேட கொவிட் பரிசோதனை
மேல் மாகாண பாடசாலைகளில் விசேட கொவிட் பரிசோதனைகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேல் மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எழுமாறான அடிப்படையில் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்தில் இன்று இந்த பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.நாள் ஒன்றுக்கு சில பாடசாலைகளை தெரிவு செய்து அதில் 30 மாணவ, மாணவியருக்கு அன்டிஜன் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.
இவ்வாறு பரிசோதனை நடாத்துவதன் மூலம் கொவிட் எவ்வாறு பரவிச் செல்கின்றது என்பதனை கண்டறிந்து கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஒக்ரோபர் மாதம் 4ம் திகதி முதல் இதுவரையில் மேல் மாகாணத்தில் 42000 கொவிட் தொற்றுறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri