கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு
கிளிநொச்சி (Kilinochchi) - கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று கரைச்சி மேலதிக பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கருத்தமர்வானது, இன்று (27.05.2024) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, சுற்றுச்சூழல், உலக மற்றும் உள்ளூர் நீர் வளங்கள், நீருக்கான நெருக்கடிகள், பொது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், நீர் பயன்பாடு, நீர் வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
விசேட கருத்தமர்வு
மேலும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மாணவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச கள உத்தியோத்தர்களுக்கு குறித்த கருத்தமர்வானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதேவேளை, இக் கருத்தமர்வினை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் எந்திரி எஸ். சாரங்கனும், அதன் உத்தியோகத்தர் மு. தமிழ்ச்செல்வன் ஆகியோர் நடாத்திருந்தனர்.
இதன்போது, அலுவலர்கள், அபிவிருத்தி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 51 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
