தம்புள்ளையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
தம்புள்ளையில் காணப்படும் சுற்றுலாத்தளங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று காலை முதல் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, தம்புள்ளை ரஜமகா விகாரை, தம்புள்ளை உயவத்த ரஜமகாவிகாரை மற்றும் சுற்றுலாத்தளங்கள், உணவகங்கள் என்பவற்றில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க தூதரகம் பிரஜைகளுக்கு எச்சரிக்கை
இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சுறுத்தல் காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதரகம் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அறுகம்பை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், எனவே அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனையடுத்து, அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்கள், விமான நிலையங்கள், கண்டியில் இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள சுற்றுலா விடுதிகளில் விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri