யாழில் விசேட போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கை: பலர் கைது
நாடு முழுவதும் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் விசேட போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையானது யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின் வழிகாட்டுதலின் கீழ் நேற்று (27.12.2023) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
இதன்போது யாழ். மத்திய பேருந்து நிலையப் பகுதி மற்றும் யாழ். நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களிலும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த தேடுதல் நடவடிக்கையானது யாழ். பொலிஸாரினால் மோப்ப நாய்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri