யாழில் தீவிரம் அடையும் டெங்கால் அதிகரிக்கும் உயிரிழப்பு : 136 பேர் சிகிச்சை
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குள் மூன்றாவது டெங்கு மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 11 மாத குழந்தையும், யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 25 வயதுடைய யுவதியும் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு நோயாளர்கள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டும் 136 டெங்கு நோயாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளும் மக்களும் சமமாக செயற்பட வேண்டுமென இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
