இலங்கை இராணுவத் தளபதிக்கு எதிராக பிரித்தானியாவிடம் கையளிக்கப்பட்டுள்ள விசேட அறிக்கை!
இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறித்த 50 பக்க அறிக்கையை அரச சார்பற்ற அமைப்பு ஒன்று, பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய மேம்பாட்டு அலுவலகத்தின் பொருளாதாரத் துறைக்கு சமர்ப்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ஐ.டி.பி.ஜே) இந்த அறிக்கையை அளித்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டம் குறித்த விரிவான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன, அவை சர்வதேச சட்டத்தரணிகளால் சேகரிக்கப்பட்டவையாகும்.
இதில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் சாட்சியங்கள் என்பன முக்கியமானவை என்று சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடக்கில் 2009 ல் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் 58 பிரிவுத் தளபதியாக இருந்தபோது, சவேந்திர சில்வா, வாழ்வதற்கான உரிமை உள்ளிட்ட மொத்த மனித உரிமை மீறல்களில் தொடர்புபட்டுள்ளார்.
நோ ஃபயர் சோன்ஸ் என்று அழைக்கப்படும் மருத்துவமனைகள் உட்பட்ட இடங்களின் மீது நடத்திய தாக்குதல்களில் இருந்து தப்பிய தமிழர்களிடமிருந்து நேரடி சாட்சிகள இதனை நிரூபிக்கின்றன.
அவர்களில் பலர் இப்போது இங்கிலாந்தில் அகதிகளாக வசிக்கின்றனர். யுத்தத்தின் முடிவில் அத்துமீறல்களில் பங்கு வகித்ததற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை 2020ம் ஆண்டில் ஷவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தியதை சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை போரின் போது இராணுவம் கடுமையான மனித உரிமை மீறல்களைச் செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan