மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு: பெண்ணொருவர் அதிரடியாக கைது
மொரட்டுவை- பிரான்சிஸ்கு பகுதியில் வலானை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலானை மத்திய ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று (1.7.2026) இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 107 கிராம் 48 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரான்சிஸ்கு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
அத்துடன், அவரிடமிருந்து போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 25 இலட்சத்து 61 ஆயிரத்து 100 ரூபா ரொக்கப் பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், பணம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மொரட்டுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam