கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை
அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் மின்சார அமைப்பு மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் ஜூலை 4, சனிக்கிழமையன்று 12 மணி நேர நீர் விநியோகத் தடை விதிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச்சபை (NWSDB) அறிவித்துள்ளது.
காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த நடைமுறையில் இருக்கும்.
கொழும்பு 1 முதல் 15 வரை
முல்லேரியாவ மின்கட்டமைப்பு துணை மின்நிலையத்தில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சாரம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படுவதால், நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தெஹிவளை மற்றும் மாளிகாவத்தை ஆகியவற்றில் மின் அமைப்பு மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கொழும்பு 1 முதல் 15 வரை, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, ராஜகிரிய, மிரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பிலியந்தலை போன்ற பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச்சபை அறிவுறுத்தியுள்ளது.
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam