தொடரும் விசேட சோதனை: 24 மணிநேரத்தில் 728 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று (08) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 728 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 558 பேரும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 170 பேரும் அடங்குகின்றனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருட்கள் மீட்பு
கைதானவர்களில் 3 பேர் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்புகளின்போது, சுமார் 5 கிலோ கஞ்சா, 122 கிராம் ஹெரோயின், 1,852 போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri