மீண்டும் அதிகரிக்கப்படும் கொடுப்பனவுகள்: நிதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிவாரணப் பயனாளி
இதன்படி 5,000 ரூபாயாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை 7,500 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

மேலும் 2,000 ரூபாயாக இருந்த முதியோர் உதவித்தொகை 3,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, தற்போது நிவாரணப் பயனாளி குடும்பங்களில் உள்ள ஊனமுற்றோர்இ முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அடையாளம் காணப்பட உள்ளனர்.
அதன் பின்னர் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அவர்களுக்கும் இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri