நெடுந்தீவு துறைமுகத்தை புனரமைக்க விசேட திட்டம்
நெடுந்தீவு துறைமுகத்தை புனரமைப்பதற்கான திட்டங்கள் கடற்படையினரிடம் இருப்பதாகவும் அது தொடர்பில் தன்னுடன் பேசப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“வெளிநாட்டு நிதி மூலங்களிலிருந்தே துறைமுகத்தை புனரமைப்புச் செய்ய வாய்ப்புள்ளது. அதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றது.
துறைமுக புனரமைப்பு
மேலும், குறிகாட்டுவான் துறைமுகத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் சுற்றுலாத்துறையை நீண்டகால நோக்கில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகார சபை ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது நெடுந்தீவின் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மேலும், நெடுந்தீவு கடற்றொழில் சமாசத்துக்குச் சொந்தமான அலையரசி படகு திருத்த வேலை காரணமாக பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரம்மாண்டமான பிக்பாஸ் புதிய சீசனிற்கு இந்த இளம் நடிகர் தான் புதிய தொகுப்பாளரா?.. அடடே சூப்பர் Cineulagam

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ Cineulagam
