இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த விசேட வேலைத்திட்டம்
இனங்களிடையே நல்லிணக்கத்தினையும், ஒற்றுமையினை தொடர்ந்து பேணவும், முரண்பாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களை இனங்கண்டு அவற்றினை இல்லாமல்செய்து சமூக ஒற்றுமையினை ஏற்படுத்தும் வகையிலான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நல்லிணக்கத்திற்காக பல்கலைக்கழகம் மற்றும் அரசின் ஈடுபாட்டினை அணிதிரட்டுதல் என்னும் தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கிழக்கு பல்கலைக்கழகம்,யாழ் பல்கலைக்கழகம்,சப்ரகமுவ பல்கலைக்கழகம்,ருகுணு பல்கலைக்கழகம் என நான்கு பல்கலைக்கழகங்களை இணைத்து அதனுடன் அந்தந்த மாகாணங்களில் உள்ள மாவட்ட செயலகங்களை இணைத்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
விசேட வேலைத்திட்டம்
இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் தேசிய சமாதானப்பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுசெய்யப்பட் இனநல்லிணக்கம் அதனுடன் இணைந்த நடவடிக்கைகள் குறித்த ஆய்வு முன்வைக்கப்பட்டு கருத்துரைகள் வழங்கப்பட்டன.
இன,மத நல்லிணக்கத்தினை பேணும் வகையிலான சமூகம் ஒன்றிணை கட்டியெழுப்பும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா முரளிதரன், உதவி அரசாங்க அதிபர், தேசிய சமாதான பேரவையின் சார்பில் பேராசிரியர் ஜெயசிங்கம், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சுரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Rasipalan: இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள் Manithan

முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது? News Lankasri

22 வயதில்.., பயிற்சியில்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
