அம்பாறையில் சுகாதாரமற்ற உணவகங்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவீடு
நோன்பு காலத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (25) திடீர் உணவுப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்மாந்துறை, நிந்தவூர், மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வழக்கு தாக்கல்
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். நௌசாத் தலைமையில் கல்முனை மாநகர் பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 உணவகங்களுக்கு எதிராக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு உணவின் தரம் பற்றி தகவல் வழங்கப்பட்டது.
மேலும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மதன் தலைமையிலான குழுவினரினால் சம்மாந்துறை பிரதேசத்தில் தீடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 உணவகங்களுக்கு எதிராக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு உணவின் தரம் பற்றி தகவல் வழங்கப்பட்டன.
இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பண்டங்கள் மற்றும் பொருட்களை சுகாதாரத்துக்கு முறைகேடான வகையில் தயாரித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவைகள் சோதனை மேற்கொள்ளப்பட்டு பாவனைக்கு உதவாத பொருட்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.
அத்துடன் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட சுகாதாரமற்ற 5 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சம்மாந்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 70,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது? News Lankasri

22 வயதில்.., பயிற்சியில்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

152 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் நடக்கும் கிரக பெயர்ச்சி- செல்லப்பிள்ளைகளாக இருக்கும் நட்சத்திரங்கள் Manithan

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan
