எரிபொருளைத் தடையின்றி வழங்க ஒப்பந்தம்! சுனில் ஹந்துன்னெத்தி வெளியிட்ட தகவல்
கைத்தொழில் துறைக்குத் தேவையான எரிபொருளைத் தடையின்றி வழங்குவதற்காக அரசாங்கம் விசேட நடைமுறையொன்றின் கீழ் செயற்பட்டு வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
இன்று (17.03.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தடையின்றி வழங்க முடிவு
கட்டுமானம், உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சேவைத் தொழில்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் எரிபொருள் வசதிகளைத் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறையின் கீழ் கைத்தொழில் அதிபர்களுக்கு கூகுள் ஊடாகப் பதிவு செய்துகொள்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளதுடன், இதுவரை சுமார் 750 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அவர்களின் எரிபொருள் தேவைகள், துறை மற்றும் போக்குவரத்துப் பயன்பாடு குறித்த விரிவான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும், அந்தத் தகவல்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பப்பட்டு, வாராந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் கைத்தொழில்களுக்கு நியாயமான முறையில் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
ஒப்பந்தங்கள் மூலம் விநியோகம்
அத்துடன், நிறுவனங்கள் தமக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களையோ அல்லது தமது சொந்த விநியோக மையங்களையோ பெயரிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று, உரிய ஒப்பந்தங்கள் மூலம் விநியோகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, சுற்றுலாத் துறைக்கும் விசேட முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு வரிசையின்றி எரிபொருளை வழங்குவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, நாட்டின் கைத்தொழில், ஏற்றுமதி மற்றும் சேவைத் துறைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை அளித்துச் செயற்படும் என உறுதியளித்துள்ளார்.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri