அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வடமராட்சியில் சிறப்பு பூசைகள்
அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபர ஆழ்வார் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் அயோத்தியில் இராமர் கோவிலில் இன்று (22.01.2024) கும்பாபிஷேகம் இடம்பெற்ற நிலையிலேயே, யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திலும் மேற்படி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
சுதர்சன ஈஸ்வரக் குருக்கள் கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் இணைந்து காலை பத்து மணியளவில் ஸ்நபனம் அபிஷேகம் நடாத்திய பின்னர் இராமருக்கான விசேட அபிஷேக பூஜைகள் இடம்பெற்றுள்ளன.
இராம பஜனைகள்
மேலும், குறித்த பூஜை வழிபாடுகளில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள், வல்லிபுர ஆழ்வார் பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் இராம பஜனைகளும் இடம்பெற்றுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
