பிரமாண்ட முறையில் நடந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று பிரமாண்டமான முறையில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது.
பிரதமர் நரேந்திர மோடியினால் சமய சடங்குகள் செய்யப்பட்டதுடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து பால ராமரின் கண் திறக்கப்பட்டது.
கும்பாபிஷேகம்
கடந்த 18ஆம் திகதி கோவில் கருவறையில் 5 வயதான குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட்டது.
இந்த சிலையே இன்று பிரதிஸ்டை செய்யப்பட்டது.
கோயில் கருவறையில் உள்ள சிலைக்கு இன்று அர்ச்சகர்கள் பூசை, சடங்குகள் செய்தனர்.
#WATCH | First visuals of the Ram Lalla idol at the Shri Ram Janmaboomi Temple in Ayodhya pic.twitter.com/E0VIhkWu4g
— ANI (@ANI) January 22, 2024
பிரதமர் மோடி 12.05 மணிக்கு கோவிலுக்குள் வந்தார். இந்தநிலையில் கும்பாபிஷேகம் மதியம் 12.15 முதல் 12.45 மணிக்குள் நடைபெற்று முடிந்தது.
இந்த நேரத்தில் பால ராமர் சிலைக்கு பிரதிஸ்டை சடங்குகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.
பிரமாண்டமான அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ஏராளமான பிரபலங்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்ட போது ஆலயத்தில் திரண்டிருந்த சுமார் 8 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்களும் பார்ப்பதற்கு வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பல இடங்களில் அகன்ற திரைகள் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. 12.30 மணிக்கு பிராண பிரதிஷ்டை நடந்தபோது உலங்கு வானூர்தியில் இருந்து அயோத்தி ராமர் ஆலயம் மீது பூ மழை பொழியப்பட்டது. மதியம் 1 மணி வரை சுமார் ஒருமணி நேரம் கருவறை பூஜைகள் நடைபெற்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |