நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் (Photos)
சிங்கள தமிழ்ப் புத்தாண்டு தினமாகிய இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில் முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுபகிருது வருட தமிழ்ப் புத்தாண்டு தினமாகிய இன்று வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அத்துடன் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானைசமேதராக மயில் வாகனத்தில் எழுந்தருளி நல்லூர் ஆலயத உள்வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி
இன்றுகாலை 7.50 சுப நேரத்தில் சுபகிருது வருட பிறப்பு இடம்பெற்றிருந்த
நிலையில், நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் அடியவர்கள் மருத்துநீர் தேய்த்து நீராடி
புத்தாடை அணிந்து முருகப்பெருமானைத் தரிசித்து தமது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.








பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
