தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் : சிறப்பு கொள்கை தொடர்பான வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு சிறப்பு கொள்கை தேவைப்படுவதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய செய்தி தாளொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களின் கோரிக்கை
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்திய சட்டப்படி, தற்போது பெற்றோரில் ஒருவர் “சட்டவிரோத குடியேறி” என வகைப்படுத்தப்பட்டால், அவர்களின் குழந்தையும் அதே நிலைக்கு தள்ளப்படுகிறார். இதனால் குடியுரிமை, வாக்காளர் பட்டியல் சேர்ப்பு போன்ற அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அகதிகளுக்கான வீடுகள் மற்றும் வசதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வாழும் இலங்கை அகதிகள், மனிதாபிமான சட்ட அமைப்பு, மத்திய - மாநில ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவற்றை கோருகின்றனர்.
அத்துடன், இந்தியா - இலங்கை ஒப்பந்தங்களின் வரலாற்றுப் பின்னணியை கருத்தில் கொண்டு, அகதிகள் மீள்குடியேற்றத்திற்கு தனித்துவமான கொள்கை அவசியம் என்று இலங்கை அகதிகள் கோருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam