யாழில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அரச பேருந்து நிலையம் மற்றும் எழுதுமட்டுவாள் பகுதியில் பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் யுக்திய 2024 சின்னம் பொறித்த ஸ்ரிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையானது நேற்று (08.01.2024) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டலில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்தவின் கீழ் அதிரடிப் படையினருடன் இணைந்து மோப்பநாய்களுடன் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
சோதனை நடவடிக்கை
இதன்போது பேருந்துகளிலுள்ள பயணிகள் சோதனையிடப்பட்டு போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டதுடன் பேருந்துகளில் யுக்திய 2024 சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்ரிக்கர்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் எழுதுமட்டுவாள் பகுதியிலும் நேற்றைய தினம்(08) சென்ற பேருந்துகளை வழிமறித்து விசேட சோதனைகளும் இடம்பெற்றுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri