இஸ்ரேலின் தாக்குதலில் பலியான ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி பலியாகியுள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல், கடந்த வாரம் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் துணை தலைவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் ராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
ஹமாஸுக்கு ஆதரவு
இந்த நிலையில் ஹிஸ்புல்லா தளபதி பயணித்த கார் மீது இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து ஹிஸ்புல்லா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் கட்டுமானங்கள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த அக்டோபர் 7 ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
