இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! மக்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
இலங்கையில் மக்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் பொது மக்களுக்கு நிவாரண பொதியொன்று வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு போன்ற இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்கு ரூபாவிற்கு எதிரான டொலரின் மதிப்பு அதிகரிப்பு காரணமாகும்.

இதனால் வாழ்க்கைச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது. 203 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி இன்று 365 ரூபாவாக அதிகரித்துள்ளது.
பொது மக்களுக்கு நிவாரணம்
அந்நியச் செலாவணி அதிகரித்ததன் காரணமாக பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. இதன்மூலம் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் உயர்வடைந்துள்ளது.

விலைவாசி உயர்வைத் தடுக்க முடியாத நிலை இருக்கிறது. திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வெளிநாட்டு உதவிகளின் ஊடாக உதவ திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri