புதிய சட்டம் தயார்! முப்படையினருக்கும் ஜனாதிபதி விசேட உத்தரவு: அரசியல் ஆய்வாளர் தகவல் (Video)
எந்த எல்லைக்கும் சென்று, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நிறுத்துவதற்கான முழு காய்நகர்த்தல்களையும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வார் என்று இலங்கையில் இருக்கும் அரசியல் ஆய்வாளரும், புலனாய்வுச் செய்தியாளரும், சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்போது இலங்கையில் இருக்கும் சூழ்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய சட்டத் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அது என்ன சட்டத்திருத்தம்? என எழுப்பப்பட்ட கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் மேலும் குறிப்பிடுகையில்,
''இந்த சட்டத்திருத்தம் குறித்து கடந்த ஓகஸ்ட் மாதமே நாங்கள் சொல்லியிருந்தோம். சர்வதேச அழுத்தம் கூறுகின்றது, இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு. அதனை நீக்குவதற்கான உத்தரவாதமும் கோட்டாபய காலத்தில் கொடுத்திருந்தார்.
இப்போது, அந்த சட்டத்திற்கு பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வருகின்றார்கள். இரண்டும் ஒன்றுதான். பெயர்தான் வித்தியாசம். வேறு ஒன்றும் மாறவில்லை.
அதன் முழு நோக்கம், அரசுக்கெதிராக இலங்கையில் ஆங்காங்கே மக்கள் எதிர்ப்பு சக்திகள் வெளியாகப் போவதாக அரசுக்கு ஒரு தகவல் எட்டியிருக்கின்றது.
இந்த மக்கள் கிளர்ச்சியானது 87ஆம் ஆண்டு ஜேவிபியின் காலத்தில் இருந்த நிலைமையை கொண்டு வரலாம் என்ற விடயமும் சுட்டக்காட்டப்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,