இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்! பொலிஸாரைத் தொடர்பு கொள்க
ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் சந்தேநபர்கள் இனங்காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரைத் தொடர்பு கொள்க
எனினும் அவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களிலோ அல்லது வட்ஸ்அப் ஊடாகவோ தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொலைபேசி எண்கள்
- 0112 083 049
- 0756 371 563
- 1997 அந்தந்த சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.