அடையாள அட்டைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு
எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கும் போது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டை தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு இன்று நடத்திய (14) விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, “செல்லுபடியான தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டை. அதனுடன், ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கிய அடையாள அட்டை போன்றவை ஏற்றுக்கொள்ளப்படும்.
தற்காலிக அடையாள அட்டை
இவை எதுவும் இல்லாதவர்கள், தங்கள் கிராம அலுவலருடன் தேர்தல் அலுவலகத்துக்குச் சென்று, தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதேவேளை, இம்முறை மாற்றுத்திறனாளி சமூகத்தினருக்கான தற்காலிக அடையாள அட்டையை வழங்கியுள்ளோம்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
