இலங்கையில் உள்ள அமெரிக்கர்களுக்கான விசேட அறிவிப்பு!
வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க பிரஜைகளின் கடவுச்சீட்டு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியுடனோ அல்லது அதற்கு பின்னரோ காலாவதியானால், காலாவதியான அதே கடவுச்சீட்டை பயன்படுத்தி அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ம் திகதி வரை நேரடியாக அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்துக்கொள்ள http://travel.state.gov என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்குமாறும் அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
Attention American citizens: If you are overseas and your passport expired on or after Jan. 1, 2020, you may be able to use your expired passport to return directly to the United States until March 31, 2022. See https://t.co/KswsbDXSiX for additional details. #ConsularWednesday pic.twitter.com/dPGO8vYMok
— U.S. Embassy Colombo (@USEmbSL) December 29, 2021