ரஃபாவின் இருதரப்பு நடவடிக்கை: பாலஸ்தீனம் - சவூதி இடையே விசேட பேச்சுவார்த்தை
பாலஸ்தீனிய அரசாங்கத்தின் (Palestine) புதிய பிரதமர் முகமது முஸ்தபா, சவூதி(Saudi Arabia) வெளியுறவு அமைச்சருடன் விசேட சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.
ரியாத்துக்கு ஒரு தூதுக்குழுவை விரைவில் அனுப்புவது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் சவூதி வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில், காசாவில் நிவாரண முயற்சிகளை மேம்படுத்துவது, ஒருங்கிணைப்பது மற்றும் பாலஸ்தீனத்துக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடுத்தர மற்றும் நீண்ட கால வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Prime Minister discusses with the #Saudi Foreign Minister enhancing and coordinating relief efforts in Gaza ?? ??
— State of Palestine - MFA ???? (@pmofa) May 9, 2024
بحث الجانبان خلال اللقاء الذي عقد في العاصمة السعودية الرياض، اليوم الخميس، تعزيز الجهود الإغاثية لمواجهة الكارثة الإنسانية المتفاقمة في قطاع غزة، وتنسيق الجهود… pic.twitter.com/ocCycsqzzC
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு
காசாவின் மேற்குக் கரை முழுவதும் ஆக்கிரமிப்புடன் இஸ்ரேல் தனது சார்பாக அறவிடும் வரி வருவாய் காரணமாக பாலஸ்தீனதில் மோசமடைந்து வரும் நிதி நெருக்கடி தொடர்பிலும் முஸ்தபா கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
மேலும், தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் இரு தரப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |