மன்னாரில் விசேட நடமாடும் மருத்துவ முகாம்! பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவுறுத்தல்
நாட்டில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் கடும் மழையுடனான வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டு நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு முருங்கன் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடமாடும் வைத்திய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முருங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையிலான குழுவினர் தொடர்ச்சியாக வைத்திய பரிசோதனைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதி
நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் மன்னார்,மாந்தை மேற்கு,மடு,நானாட்டான் மற்றும் முசலி ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள்,பாடசாலைகள் மற்றும் பொது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில் குறித்த நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குழந்தைகள்,சிறுவர்கள்,பெண்கள்,கர்ப்பிணித் தாய்மார் மற்றும் வயோதிபர்கள் ஆகியோரின் நலனை கருத்தியில் கொண்டு அவர்களுக்கான மருத்துவ சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.





