திருகோணமலையில் வெள்ளபாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்
திருகோணமலையில் தற்போது ஏற்பட்டு வரும் சீரற்ற காலநிலை மாற்றத்தினால் வெள்ளபாதிப்பு மற்றும் அனர்த்தம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமானது நேற்று (29) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையுரையுடன் இவ்விசேட கூட்டமானது ஆரம்பமானது.
அனர்த்த நிலைமை
மாவட்டத்தில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை, அனர்த்தத்தைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மோசமான வானிலையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தடுப்பதற்கான திட்டமிடல் உள்ளிட்டவை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதன்போது வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா, கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னலகே, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சன, பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திற்காக நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
