முல்லைத்தீவில் இடம்பெற்ற சட்டவிரோத கடற்தொழிலை தடுத்தல் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம்
முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தில் சட்டவிரோத ஆழ் கடற்தொழில் மற்றும் களப்பு மீன்பிடியை தடுத்தல் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் விசேட கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் தற்போதைய கள நிலமைகளை ஆராயும் பொருட்டு விசேட மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது இன்றைய தினம் (29.05.2024) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் பி.ப 2.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிரான சட்டங்கள்
இதன்போது சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தல் மற்றும் அவர்களுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கா.மோகனகுமார், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் , கடற்தொழில் சங்கம் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள், கடற்தொழிலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |