வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண்ணுக்கு இடைநடுவே ஏற்பட்ட விபரீதம்
குவைத்தில் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பிய பெண்ணொருவர் இடைநடுவே ஏற்பட்ட வாகன விபத்தில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
பசறை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஏறக்குறைய 03 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்திற்கான காரணம்
பெல்மடுல்ல பகுதியில் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதி வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்த பெண் உட்பட மூன்று பயணிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
மேலும், காயமடைந்தவர்கள் பெல்மடுல்ல, கஹவத்தை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது பலத்த காயமடைந்திருந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
