அரசாங்கத்திற்கும், இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு
அரசாங்கத்திற்கும், இறக்குமதியாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்போன்று இன்று நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிற்கும் (Lasantha Alagiyawanna), அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
இதன்போது நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீனி மற்றும் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பால் மா விலை உயர்த்தப்பட்டாலும் பால் மாவிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த பிரச்சினைகள் குறித்து இறக்குமதியாளர்களுடன் பேசி தீர்வு எட்ட முயற்சிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan