மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம்: விசேட அதிரடிப்படையினரால் திடீர் சோதனை
மட்டக்களப்பு (Batticaloa) - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை - பச்சை வீட்டு திட்டம் பிரதேசத்தில் இன்று (24) காலை விசேட அதிரடிப்படையினரால் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 15ஆம் திகதி குறித்த கிராமத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் கடந்த 22 ஆம் திகதி அதே வீட்டின் முன்பாக இருந்து கண்டெடுக்கப்பட்ட கைகுண்டு ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து மேற்படி சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
35 வீடுகளில் சோதனை
இதற்கமைய, இன்று அதிகாலை ஆரம்பிக்கப்பட்ட இச்சுற்றிவளைப்பின் போது பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர்கள் ஒவ்வொரு வீடாக சென்று மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், கிட்டத்தட்ட 35 வீடுகள் இவ்வாறு சுற்றி வளைப்பு தேர்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, 28 பொலிஸார்,10 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 22 இராணுவத்தினர் என சுமார் 60 பேர் உள்ளிட்ட குழு இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri