எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கிரிக்கெட் குறித்து கூச்சலிடுவதில் அர்த்தமில்லை: விளையாட்டுத்துறை அமைச்சர் பதிலடி
புதிய இணைப்பு
இலங்கை கிரிக்கெட் பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஏனெனில், சபையில் விவாதிக்கப்படும் விடயங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கவனத்தில் கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே விளையாட்டுத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) வித்தியாசமான முறையில் செயல்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
SLC இல் ஊழல் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியை சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளோம்.
சித்திரசிறி அறிக்கையின் சிபாரிசுகளின் அடிப்படையில் விளையாட்டு சட்டத்தையும் மாற்றுவோம் என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
]முதலாம் இணைப்பு
இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கலைக்கப்பட்டுள்ள இடைக்கால குழு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரங்கள், பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரால் இடைக்கால குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 5ஆம் திகதி அவரால் வெளியிடப்பட்ட 2356/43 இலக்க வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இவ் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு கலைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.