மகிந்தவுக்காக களமிறங்கியுள்ள சிறப்பு குழு - மகிந்தவின் அடுத்தக்கட்ட திட்டம்
கொழும்பில் மீண்டும் குடியேற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீவிரமாக முயற்சித்து வருகிறார். எனினும் அவருக்கு பொருத்தமான வீடுகள் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் முக்கிய பகுதிகளிலுள்ள நான்கு வீடுகள் தெரிவு செய்யப்பட்ட போதும், மகிந்தவுக்கு பிடித்தமானதாக அவை இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மகிந்தவின் கோரிக்கைக்கு ஏற்ற வகையில் வீடொன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிறப்பு குழுவொன்று களமிறங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மகிந்தவின் அரசியல் செயற்பாடு
இன்னும் மகிந்த அரசியல் செயற்பாட்டில் உள்ளமையினால், பல ராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்களை அவர் சந்திக்க வேண்டியுள்ளதால், அதற்கு பொருத்தமான வீடொன்று தேடி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

போதுமான மற்றும் பொருத்தமான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ள பகுதியில் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுப்பதே எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்ற பொருத்தமான வீடு விரைவில் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சாகர காரியவசம் மேலும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ஒழிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்ச விஜேராம மாவத்தையில் உள்ள அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன் வீட்டிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam