வட்டியில்லா கடன் திட்டம் - வெளியான அறிவிப்பு
2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது தொகுதி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தற்போது கோரியுள்ளது.
தகுதியுள்ள மாணவர்கள் நவம்பர் முதலாம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி வரை www.studentloans.mohe.gov.lk என்ற இணையதளம் ஊடாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப் படிப்புகளைத் தொடர கடன்
அங்கீகரிக்கப்பட்ட அரச அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் முற்றிலும் ஆங்கில வழியில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளைத் தொடர இந்த கடன் வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் ஒரே அமர்வில் குறைந்தபட்சம் மூன்று சாதாரண சித்தி பெற்றிருக்க வேண்டும், அத்துடன் நவம்பர் முதலாம் திகதியன்று, 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூபா 15 இலட்சம் ரூபாய் (கற்கைநெறிக் கட்டணங்களுக்காக) கடனாக வழங்கப்படும் என்பதுடன் வாழ்க்கைச் செலவுகளுக்காக ஆண்டுக்கு தலா 75,000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும்.
வாய்ப்பு
இந்தக் கடன் வட்டியில்லாமல் வழங்கப்படுவதுடன் பட்டப்படிப்பு முடிந்த பிறகு ஒரு வருட சலுகை காலத்துடன் சேர்த்து, 12 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
மாணவர்கள் தொடர்ந்து தகுதி பெற, 80% வருகை வீதம் மற்றும் கட்டாயப் பாடங்களில் குறைந்தபட்சம் திறமை (C) சித்தியைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்! பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விபத்து
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri