மக்களின் அன்பு ஒருபோதும் முடிவுக்கு வராது! மகிந்தவின் முகப்புத்தக பதிவு..
மக்களுடன் உணர்வுகளால் பிணைக்கப்படாத அரசியல்வாதி, ஒருபோதும் மக்கள் தலைவராக முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தக கணக்கில் பதிவிட்டுள்ள பதிவிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவிக்காலம்
ஜனாதிபதி பதவிக்காலம் முடிவுக்கு வந்தாலும், மக்களின் அன்பு ஒருபோதும் முடிவுக்கு வராது என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
"எனது வாழ்க்கையின் பெரும்பகுதி மக்களிடையே கழிந்தது. இன்றும் அது அப்படியே உள்ளது. ஜனாதிபதி பதவிக்காலம் முடிவுக்கு வரலாம், ஆனால் மக்களின் அன்பு அந்த காலத்தை விட அதிகமாகும்.
அது ஒருபோதும் முடிவடையாது. மக்கள் மகிந்த ராஜபக்சவுடன் ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் உடன் நின்றனர்," என்று அவர் பதிவில் கூறியுள்ளார்.
கார்ல்டன் இல்லத்தில் தன்னை சந்தித்த மகா சங்கத்தினருக்கும், உடல்நலம் குறித்து விசாரித்த மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், நிபுணர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
