யாழில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு (Photos)
யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் இன்றைய தினம் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலையில் விற்றல் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விற்பனை செய்யாது சேமித்து வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் இன்றையதினம் யாழ். குடாநாட்டில் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இணைப்பாளர் விஜிதரனின் நெறிப்படுத்தலில் யாழ். குடாநாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதோடு, எரிபொருள் விற்பனை நிலையங்களின் எரிபொருள் கொள்கலன்களும் கண்காணிக்கப்பட்டுள்ளன.



