எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சில முக்கிய தரப்பினருக்கு முன்னுரிமை! மின்சக்தி அமைச்சர் தகவல்
இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சில முக்கிய தரப்பினருக்கு நாளை முதல் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி தனியார் பேருந்துகள், பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனம் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் வாகனங்களுக்கு இவ்வாறு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து சேவைகளுக்கு கடும் பாதிப்பு
இதற்கமைய, குறித்த நபர்கள் தங்களுக்கு அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், இதற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan