நாடளாவிய ரீதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையில் வீழ்ச்சி
நாடளாவிய ரீதியில் அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற பாடசாலைகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டதாகத் தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் பொருளாதார பிரச்சினைகளின் காரணமாக இவ்வாறு மாணவர்கள், ஆசிரியர் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
எரிபொருள் பிரச்சினை காரணமாக பேருந்து போக்குவரத்தினை வரையறுத்துக் கொள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
மாணவர்களின் வருகையில் தாக்கத்தை செலுத்திய எரிபொருள் விலையேற்றம்
இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக பாடசாலை வேன்களுக்கான போக்குவரத்து கட்டணங்களை 40 வீதத்தினால் உயர்த்துவதாக பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாத் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பும் மாணவர்களின் வருகையில் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
பாடசாலை கட்டமைப்பினை பாதுகாக்க வேண்டுமாயின் பேருந்து மற்றும் பாடசாலை வேன்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.